ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூர் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு கரோனா

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் செல்வப்பெருந்தகை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அவரது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

செல்வப்பெருந்தகை
செல்வப்பெருந்தகை
author img

By

Published : Apr 8, 2021, 4:55 PM IST

தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் செல்வப்பெருந்தகை போட்டியிட்டார். இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து தற்போது அவர் தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திகொண்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

நேற்றைய நிலவரப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 31 ஆயிரத்து 287 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 ஆயிரத்து 221 பேர் சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர். 602 பேர் தற்போது சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதுவரையில் அம்மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 464 பேர் உயிரிழந்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.