காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கே. பழனி தனது தொகுதிக்கு உள்பட்ட எறையூர், போந்தூர், வல்லம், வடகால் உள்ளிட்ட கிராமங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது போந்தூர் கிராமத்தில் கே. பழனியை சிலம்பம் சுற்றி வரவேற்றனர். இதையடுத்து சிலம்பம் சுற்றியவர்களிடமிருந்து சிலம்பத்தை வாங்கி சுற்றினார். இதைப் பார்த்த பொதுமக்களும் தொண்டர்களும் உற்சாகம் அடைந்தனர். பின்னர் கூட்டணிக் கட்சியினருடன் குதிரை வண்டியில் சென்று அதிமுக அரசு செய்த சாதனைகளை கூறி பொது மக்களிடம் வாக்கு சேகரித்தார்.