ETV Bharat / state

ஈ.பி.எஸ் பொதுச்செயலாளராக வேண்டி அதிமுக அவைத்தலைவர் சிறப்பு துஆ! - எடப்பாடி பழனிச்சாமிக்காக சிறப்பு பிராத்தனை

அதிமுக தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற எடப்பாடி பழனிசாமியே அதிமுகவின் பொதுச்செயலாளராக வரவேண்டுமென அதிமுகவின் அவைத் தலைவர் தமிழ்மகன் காஞ்சிபுரத்தில் உள்ள ஓர் தர்காவில் தொண்டர்களுடன் சிறப்பு துஆ செய்தார்.

ஈ.பி.எஸ் பொதுச்செயலாளராக வேண்டி அதிமுக அவைத் தலைவர் சிறப்பு துவா..!

author img

By

Published : Jun 26, 2022, 9:34 PM IST

காஞ்சிபுரம்: சென்னையை அடுத்த வானகரம் பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின், பொதுக் குழுக் கூட்டமானது நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் தற்காலிக அவைத் தலைவராக இருந்த, தமிழ்மகன் உசேன், கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிரந்தர அவைத் தலைவராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ஈ.பி.எஸ் பொதுச்செயலாளராக வேண்டி அதிமுக அவைத் தலைவர் சிறப்பு துஆ.!

இந்நிலையில், பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஹஜரத் சையத் ஷா அமீத் அவுலியா தர்காவில் சிறப்பு துஆ செய்வதற்காக வருகைபுரிந்த அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சரும் காஞ்சிபுரம் மாவட்டச்செயலாளருமான வி.சோமசுந்தரம் தலைமையில் பேண்ட் வாத்தியங்களுடன் அதிமுகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அதன் பின் தர்கா உள்ளே சென்று வருகிற 11ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் பேராதரவுடன் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட வேண்டி சிறப்பு துஆ-வில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்மகன் உசேன், 'அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தொண்டர்களின் பேராதரவோடு வர வேண்டி தர்காவில் சிறப்பு துஆ செய்தேன். வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலோடு எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வர வேண்டி பொதுக்குழு அமைய வேண்டும் எனவும் பிரார்த்தித்தேன்.

தொண்டர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கு உள்ளது. எல்லாம் வல்ல இறைவன் நல்லது செய்ய வேண்டும். நாடு போற்ற வேண்டும். அதிமுகவில் ஒற்றுமை தேவை. அந்த ஒற்றுமையை நிலைநாட்டுகின்ற பாங்கை எடப்பாடி பழனிசாமி தலைமையில் உறுதியாக செய்வோம்' எனவும் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது அதிமுக அமைப்புச் செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, ஸ்ரீபெரும்புதூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மதனந்தபுரம் கே.பழனி, காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் குண்ணவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, கே.யு.எஸ்.சோமசுந்தரம், வள்ளிநாயகம், வி.ஆர்.மணிவண்ணன், தும்பவனம் டி.ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜூ, திலக்குமார் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: கோவையில் அதிமுக பொதுக்குழு கூட்டம்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.