காஞ்சிபுரம் நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகத்தில் சுமைதூக்கும் தொழிலாளர்களுடன் அங்கே பணிபுரியும் பணியாளர்களுக்கு சுகாதாரத் துறை மருத்துவ குழுவினர் மருத்துவப் பரிசோதனை செய்தனர்.
மருத்துவ முகாமில், சர்க்கரை, ரத்தம், இருதய சுருள் படம், இருதய ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மேல் சிகிச்சைக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதில் நுகர்பொருள் சுமைதூக்கும் தொழிலாளர்கள், பணியாளர்கள் என 200க்கும் மேற்பட்டோருக்கு மருத்துவ பரிசோதனையில் பங்கேற்றனர்.
பணி, குடும்ப சூழல் போன்ற பல்வேறு காரணங்களால் சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்கள் உடலை சரியாக பராமரிக்காமல் வேலை செய்து வருகின்றனர். அவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மேலும் படிக்க: சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் 'ரஞ்சன்குடி கோட்டை'