செங்கல்பட்டு மாவட்டம் புதிதாகப் பிரிக்கப்பட்டு மூன்றாவது வாரமாக நேற்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், 17 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டாக்களும் 65 முதியவர்களுக்கு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன. இந்தக் கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் சிறிது நாட்களுக்கு முன்பு போடப்பட்ட பாவின் நுழைவு வாயில் திறக்கக் கோரியும், கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு அணுமின் நிலைய வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
திருப்போரூர் ஒன்றியத்தில் காசா கிராண்ட் தனியார் நிறுவனம் மூலம் கட்டப்பட்டுள்ள வீடுகளில் வசிக்கும் பொதுமக்கள், பழுதடைந்த சாலையை சீரமைக்கக் கோரி குடியிருப்போர் கூட்டமைப்பு சங்கத்தின் மூலம் மனுக்கள் அளிக்கப்பட்டன.
மேலும், காட்டங்களத்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் வசதி இல்லாமல் தவித்து வருவதாகவம் ஏற்கனவே அமைத்திருந்த குடிநீர் குழாய்களை சாலை விரிவாக்கத்திற்காக அப்புறப்படுத்தியதால் தற்போது குடிநீருக்காக திண்டாடி வருவதாகத் தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: இலங்கையில் உள்ள தமிழர்களை விரட்டியடிக்க திமுக சதி - பாஜக குற்றச்சாட்டு