ETV Bharat / state

"பரந்தூரில் விமான நிலையம் கட்ட விடமாட்டோம்" - அரசுக்கு எச்சரிக்கை விடுத்த சீமான்! - Kanchipuram

காஞ்சிபுரத்தில் பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு பொதுக்கூட்டத்தில், பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமைய உள்ள பரந்தூர் விமான நிலையத்தை கட்ட விடமாட்டோம்" எனக் கூறினார்.

பரந்தூர் விமான நிலையம் கட்ட விடமாட்டோம் என சீமான் ஆவேச பேச்சு

author img

By

Published : Jun 11, 2023, 9:51 AM IST

சீமான் செய்தியாளர்கள் சந்திப்பு

காஞ்சிபுரம்: பரந்தூரில் அமைய உள்ள விமான நிலையத்துக்கு பரந்தூர் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்கள் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கும் எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்து ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று காஞ்சிபுரத்தில் காந்தி ரோடு, பெரியார் தூண் அருகே பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

அதில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மக்கள் விருப்பத்திற்கு எதிராக அமையவுள்ள பரந்தூர் விமான நிலையத்தை கட்ட விட மாட்டோம். எட்டு வழிச் சாலை திட்டமும் நிறைவேறப் போவதில்லை” என்றார். மேலும் பேசிய அவர், “மக்கள் வைக்கும் கோரிக்கைகளைக் கவனித்து, அதற்காக அவர்கள் நடத்தும் போராட்டங்களில் அரசு கவனம் செலுத்தி தீர்வு காண்பதில்லை என்று சாடினார்.

தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் மதுக் கடைகளோ, விமான நிலையமோ வேண்டாம் எனப் போராடினால், அரசு அவற்றை தொடர்ந்து செயல்படுத்துவதில் மும்முரமாக உள்ளது. சென்னை விமான நிலையத்தில் புதிதாக திறக்கப்பட்ட பன்னாட்டு முனையமே இன்னும் முழுதாக செயல்பாட்டுக்கு வரவில்லை. அரசு விமானமே இல்லாத இடத்திற்கு விமான நிலையம் எதற்கு?. ரூபாய் 20 ஆயிரம் கோடியில் புதிய விமான நிலையம் கட்டுவதால் அதில் கமிஷன் தவிர வேற எதுவும் வராது. என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், "கடலில் பேனா சிலை கட்டுவதற்கு தேதி அறிவிக்கும் பொழுது, அந்தப் பேனாவை எடுக்கும் தேதியை நான் அறிவிப்பேன். ஏனெனில் ஆட்சியும் அதிகாரமும் ஒரே இடத்தில் எப்போதும் இருக்காது. மக்கள் வாழ்விடத்தை எல்லாம் ஆக்கிரமிப்பு எனக்கூறி அரசு இடிக்கும் போது, கடல் பகுதியை ஆக்கிரமிப்பு செய்து பேனா சிலை வைப்பது ஆக்கிரமிப்பு இல்லையா?. தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது எனப் பேசுவது வேடிக்கையாக உள்ளது.

பள்ளியில் காலைச் சிற்றுண்டி, இலவசப் பேருந்து, படிக்கும் மகளிருக்கு மாதம் ரூபாய் 1000 என மக்களை கையேந்தும் நிலைக்கு வைத்து விட்டு வளர்ச்சி எனப் பேசுவது தவறு. தரமான கல்வி வழங்க வகை செய்து அதற்கான பள்ளி, கல்லூரிக் கட்டணத்தை அரசு ஏற்றுக் கொள்ளட்டும். பேருந்து பயணக் கட்டணங்களை மக்களே ஏற்றுக் கொள்வார்கள். மத்திய, மாநில அரசுகள் கார்ப்பரேட் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவே ஆட்சி நடத்துகின்றனவே தவிர மக்களின் நலனுக்காக யோசிப்பது இல்லை.

ஆய்வுக்குச் செல்லும் போது மக்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களை உடனடியாக நிறைவேற்றும் முதலமைச்சர், தந்தை குடிப்பதற்காக மனம் வருந்தி தற்கொலை செய்து கொள்ளும் மாணவர்களின் கோரிக்கையான மதுக் கடைகளை மூட வேண்டும் என்பதை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும்.

பகுத்தறிவு சிந்தனை, சமூக நீதி பற்றி எல்லாம் பேசிவிட்டு கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்க மறுத்த கோயிலைத் திறந்து, அனைவரும் வழிபட அனுமதிக்காமல், கோயிலைப் பூட்டி செல்வது எந்த வகையில் தீர்வாகும். சமூகநீதிக் காவலர்கள் எனக் கூறிக்கொள்வோர் ஆட்சிக்கு வந்ததால்தான் தற்பொழுது இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகின்றன‌” என்றுக் கூறினார்.

இதையும் படிங்க: தமிழகம் வந்த அமித்ஷா.. திடீர் மின்தடையால் பாஜகவினர் சாலை மறியல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.