காஞ்சிபுரம் மாவட்டம் ரங்கசாமி குளம் அருகே கோட்ராம்பாளையம் தெருவில் வசிக்கும் அருளநாதன், அப்பகுதியிலேயே டிபன் கடை நடத்திவருகிறார். இவரின் மகள் பூஜா (17), சின்ன காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
கரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளி மூடப்பட்டுள்ள நிலையில், வீட்டில் இருக்கும் பூஜா எவ்வித வேலையும் செய்யாமல் இருந்ததாகவும், இதனால் அவ்வப்போது அவரை பெற்றோர் கண்டித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் இன்றும் வழக்கம்போல் வேலை செய்யாத பூஜாவை பெற்றோர் திட்டியுள்ளனர். இதனால், மனமுடைந்த பூஜா தற்கொலை செய்துகொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பூஜாவின் உடலை மீட்டு காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல..
மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ கீழே உள்ள 24 மணி நேர தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்:
சினேகா தற்கொலை தடுப்பு மையம் - 044- 2464 0050, மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104