காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் தேரடித் தெருவில் வசித்து வருபவர் கோகுலகிருஷ்ணனின் மகன் ரித்தீஷ் குமார் (15). இச்சிறுவன் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் தாந்தோணி அம்மன் கோயில் குளத்தில் வாலிபர்கள் குளித்து கொண்டிருப்பதைக் கண்டு தானும் குளிப்பதாகக் கூறி சிறுவன் குளத்தில் இறங்கியுள்ளார்.
அப்போது யாரும் எதிர்பாராத விதமாக ரித்தீஷ் குமார் உள்ளே மூழ்கியுள்ளான். அதைக் கண்டு பதட்டமடைந்த இளைஞர்கள், சிறுவனை தூக்கி கரைக்கு கொண்டு வந்துள்ளனர். தொடர்ந்து ரித்தீஷ் குமார் கண் விழிக்காத நிலையில், ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் ரித்தீஷ் குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் சிறுவனின் சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர். பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சிபிஎஸ்இ பத்தாம் வகுப்புத் தேர்வு ரத்து