ETV Bharat / state

மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர்களுக்கு ராமதாஸ் இரங்கல் - மின்சாரம் தாக்கி மின் ஊழியர்கள் இருவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மின் பழுதினைச் சரிசெய்யும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரு மின் ஊழியர்களுக்கு, பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

ramadoss
ramadoss
author img

By

Published : Dec 5, 2020, 12:17 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச. 04) இரவு முதல் பெய்துவரும் தொடர் கனமழையால், ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதனைச் சரிசெய்ய காஞ்சிபுரம் பருத்தி குளத்தைச் சேர்ந்த மின்சார ஊழியர் பாக்கியநாதன் (40), அவருக்கு உதவியாகச் சென்ற ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த தயாளன் (36) ஆகிய இருவரும் சரிசெய்ய சென்றபோது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.

உயிரிழந்த இருவருக்கும் மனைவி, 2 பெண்கள் குழந்தைகள் உள்ளனர். இது குறித்து தகவலறிந்த பாலுச்செட்டிசத்திரம் காவல் துறையினர் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் மின் ஊழியர்களின் மறைவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் அருகில் அறுந்து கிடந்த மின்கம்பியை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி மின்துறை ஊழியர் உள்பட இருவர் உயிரிழந்தது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

உயிரை பணயம்வைத்து மக்களுக்காகப் பணியாற்றும் மின் துறை பணியாளர்களுக்கு கூடுதல் காப்பீடு வசதிகள் செய்யப்பட வேண்டும். உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்! #SelflessTNEBWorkers”

எனப் பதிவிட்டுள்ளார்.

  • உயிரை பணயம் வைத்து மக்களுக்காக பணியாற்றும் மின் துறை பணியாளர்களுக்கு கூடுதல் காப்பீடு வசதிகள் செய்யப்பட வேண்டும். உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்!#SelflessTNEBWorkers

    — Dr S RAMADOSS (@drramadoss) December 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.