காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஏனாத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மழைநீர் சேகரிப்பு மற்றும் குடிநீர் பரிசோதனை விழிப்புணர்வு முகாம் ஆர்பிடி பொதுத் தொண்டு நிறுவனம் மூலம் நடைபெற்றது.
தனியார் தொண்டு நிறுவன தலைவர் தங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில், நீர் உற்பத்தியாகும் முறை, அவை அடையும் நிலைகள், நீரின் தன்மைகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர் என்றால் என்ன? குடிநீரை எவ்வாறு பாதுகாப்பது, மழைநீர் சேகரிப்பின் அவசியம் பற்றி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கங்கள் அளித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்கள் வழங்கப்பட்டது. இம்முகாமில் தனியார் தொண்டு நிறுவனத்தின் செயலாளர் பார்வேந்தன், பொருளாளர் மூர்த்தி, தலைமையாசிரியர் ஜி. ஏழுமலை, பள்ளி மாணவ,மாணவிகளும், ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:நவீன பேருந்து நிழற்குடை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறப்பு