மத்திய அரசு, சாமானிய மக்கள் பயன்படுத்தும் சமையல் கேஸ் விலையை 15 நாள்களில் ரூபாய் 100 உயர்த்தியுள்ளதை கண்டித்து அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் விறகு அடுப்பு சமையல் சாப்பிடலாம் வாங்க என்ற பெயரில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் டி. பிரேமா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து விறகு அடுப்பு வைத்து திரளான பெண்கள் கைகளில் பதாகைகள் ஏந்திக்கொண்டு மத்திய அரசின் கேஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.
காஞ்சிபுரத்தின் முக்கிய சாலையாக விளங்கி வரும் காந்தி சாலையில் பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க... சிலிண்டர் விலை உயர்வுக்கு புதுச்சேரி முதலமைச்சர் கண்டனம்