ETV Bharat / state

ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ரவுடி மீது வழக்குப்பதிவு - sriperumbudur independent candidate variram muthu case

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் தனித் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த பிரபல ரவுடி குன்றத்தூர் வைரமுத்து மீது மூன்று பிரிவின் கீழ் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்த ரவுடி மீது வழக்குப்பதிவு

author img

By

Published : Mar 18, 2021, 6:40 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக பிரபல ரவுடியும் தொழில் அதிபருமான குன்றத்தூர் வைரம் (43) என்பவர் போட்டியிடுகிறார். அதையொட்டி, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாட்சியருமான முத்து மாதவனிடம் பிரபல ரவுடி வைரம் நேற்று (மார்ச் 17) வேட்புமனு தாக்கல் செய்தார்.

முன்னதாக, இவர் ஸ்ரீபெரும்புதூர் சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனது ஆதரவாளர்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய பேரணியாக சென்றுள்ளார். இதனால் ஸ்ரீபெரும்புதூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதையடுத்து, இவர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தல், தேர்தல் விதிகள் மீறல், அதிக மக்கள் கூட்டம் கூட்டி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுத்தல் உள்ளிட்ட மூன்று பிரிவின் கீழ் ஶ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் இன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

வேட்புமனு தாக்கல் செய்த ரவுடி மீது வழக்குப்பதிவு

ஏற்கனவே இவர் மீது 2 கொலை வழக்கு உட்பட ஆள்கடத்தல், அடிதடி என 10க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதையும் படிங்க:ஸ்ரீபெரும்புதூர் தனி தொகுதியில் ரவுடி வேட்புமனு தாக்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.