காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அருகேயுள்ள பரமசிவன் தெருவில் பாக்கெட் சாராய வியாபாரம் படுஜோராக நடைபெற்று வருகிறது. திருக்கழுக்குன்றம் காவல்துறையினர் கண்டு கொள்ளாததால் ஏராளாமானோர் அங்கு சென்று சாராயத்தை வாங்குகின்றனர்.
இந்நிலையில், அங்கு சென்று குடிக்கும் நபர்கள் போதை தலைக்கேறியதும் நடக்கமுடியாமல் பரமசிவன் தெருவிலேயே ஆங்காங்கே படுத்து விடுகின்றனர். இதனால் அப்பகுதியில் வசிக்கும் பெண்கள் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பெண்கள்,
'கடந்த ஒருவாரமாக இங்கு சாராய வியாபாரம் நடந்து வருகிறது. இதை ரோந்து பணியில் வரும் காவல்துறையினர் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
எனவே, சாராய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்காத மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு மற்றும் திருக்கழுக்குன்றம் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கோரிக்கை வைக்கின்றோம்' - இவ்வாறு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: