தமிழ்நாடு முழுவதும் நெகிழிப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்ட நிலையில், கோயில் மற்றும் பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் நெகிழிப் பொருள்கள் வழியெங்கும் வீசப்பட்டு நகரம் முழுவதும் அசுத்தமாகக் காணப்படுகின்றது.
இதனைக் கருத்தில்கொண்டு பசுமை காஞ்சி இயக்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அரங்கம் முதல் சந்தை வழியாகப் பேருந்து நிலையம் வரை சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ - மாணவிகள் நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடத்தினர்.
பேரணியில் பள்ளி மாணவ - மாணவிகள் நெகிழி ஒழிப்பு குறித்து பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். பேரணியை காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். அப்போது பசுமை இயக்கம் ஒருங்கிணைப்பாளர் உடன் இருந்தார்.
இதையும் படிங்க: இரு நாள்களில் 30 குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல்!