காஞ்சிபுரம்: தமிழ்நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த வாரத்தில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி இல்லை என்று தமிழ்நா அரசு உத்தரவிட்டுள்ளது.
அதே நேரத்தில் வழக்கம்போல கோயில்களில் பூஜைகள் நடத்தலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது.
காஞ்சியில் குவிந்த மக்கள்
இந்நிலையில் ஜன.24ஆம் தேதியான இன்று திங்கள்கிழமை முகூர்த்த நாள் என்பதால் காஞ்சிபுரத்திற்குப் பட்டுச் சேலைகள் எடுக்க வெளிமாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதன் தொடர்ச்சியாக, காஞ்சிபுரத்திலுள்ள புகழ்பெற்ற காமாட்சி அம்மன் கோயில், வரதராஜ பெருமாள் கோயில், ஏகாம்பரநாதர் கோயில், குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி முருகன் கோயில் ஆகியவைகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
நோய் பரவும் அபாயம்
குறிப்பாக, உலகப் புகழ்பெற்ற காமாட்சியம்மன் கோயிலில் தரிசனத்திற்காக வந்த வெளிமாநில மற்றும் வெளிமாவட்ட பக்தர்கள் கூட்டமாக நெடுநேரமாகக் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அதிலும், அவர்கள் கரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளான முகக்கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் கூட்டமாகக் காத்திருந்தனர். இதனால், அப்பகுதியில் மீண்டும் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிகளவில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஒரே நேரத்தில் குவிந்ததால் கோவில் நிர்வாகம் செய்வதறியாது திணறியது.
இதையும் படிங்க: பால புரஸ்கார் விருது பெற்ற குழந்தைகளுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்