தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக இருக்கிறது. மேலும் மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதனை சிறிதும் கருத்தில் கொள்ளாமல், எவ்வித அச்சமுமின்றி பொதுமக்கள் சுற்றி வருகின்றனர். கரோனா தொற்று காரணமாக ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், வரும் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் இன்று (மே.9) முழு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
இதனால் காஞ்சிபுரம் ரயில் நிலையம் அருகில் உள்ள மீன் சந்தையில் கரோனா குறித்து எவ்வித அச்சமுமின்றி ஏராளமான அசைவப் பிரியர்கள் மீன் வாங்கிட குவிந்து வருகின்றனர். மீன் வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் காவல் துறையினர் தகுந்த இடைவெளியை கடைபிடிக்க அறிவிப்பு வெளியிட்டு வரும் நிலையிலும் பொதுமக்கள் அருகருகே நின்று மீன் வாங்கி செல்கின்றனர். இதனால் அப்பகுதியில் கரோனா நோய் தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பரவல்: வார் ரூமிற்கு 6 ஐ.ஏ.எஸ் அலுவலர்கள் நியமனம்!