ETV Bharat / state

மேகதாதுவிற்குப் பதில் காவிரி ஆற்றிற்கு தீர்மானம் வேண்டும் - பழ கருப்பையா

காஞ்சிபுரம்: திருக்கழுக்குன்றத்தில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பழ கருப்பையா, மேகதாது அணைக்கான தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு பதிலாக காவிரி ஆற்றிற்கான தீர்மானத்தைக் கொண்டுவருவது நல்லது என்று தெரிவித்தார்.

DMK
author img

By

Published : Jun 5, 2019, 12:45 PM IST

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாள் விழாவும், நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டமும் காஞ்சிபுரம் மாவட்டம் அருகே திருக்கழுக்குன்றத்தில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சர்கார் திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தவரும், மூத்த அரசியல் தலைவருமான பழ கருப்பையா கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், “இந்த அரசானது பிரதமருக்கு கைக்கூலியாக அடிமைத்தனம் மிக்கதாக மாறிவிட்டது. எனவே எஞ்சியிருக்கும் ஒன்றரை ஆண்டுகளில் அவர்களது முழு சுயரூபம் தெரியவரும். அப்போது அடுத்தபடியாக கழகத் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது திமுக மட்டும்தான். இது மக்களிடையே பெரும் ஆதரவை பெற்றுள்ளது. கல்வித்துறை அமைச்சர் இருக்கும் இரண்டு மொழிகளில் ஒன்றை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார். மத்தியில் இரண்டு மொழி பத்தாது என்று மூன்றாவதாக ஒரு மொழி திணிக்கப்படுகிறது. இந்தியை முழுவதுமாக எதிர்த்த ஒரே கட்சி திமுக மட்டும் தான். மேகதாது அணைக்கான தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு பதிலாக காவிரி ஆற்றிற்கான தீர்மானத்தைக் கொண்டுவருவது நல்லது.

பழ கருப்பையா பேச்சு
கூடங்குளம் அணுமின் நிலையம் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது. கூடங்குளத்திலிருந்து வரும் மின்சாரத்தைப் பயன்படுத்தி பெரிய பாதிப்பு உண்டாகினால் தமிழினம் அழிந்து போகும் நிலை உண்டாகும்” என அவர் உரையாற்றினார். இதில் மாவட்டச் செயலாளர் அன்பரசன், திருப்போரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இதயவர்மன், ஒன்றிய செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்துகொண்டனர்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் அருகே திருக்கழுக்குன்றத்தில் இன்று கலைஞர் கருணாநிதி அவர்களின் 96வது பிறந்தநாள் விழாவும் மற்றும் நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் நன்றி தெரிவிக்கும் கூட்டம் ஆகும் இப்போது கூட்டம் நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக சர்க்கார் திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் அரசியல்வாதி பழ கருப்பையா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்

Body:நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட செயலாளர் தா மோ அன்பரசன் அவர்கள் மற்றும் திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இதய வர்மன் மற்றும் ஒன்றிய செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் சிறப்பு விருந்தினராக பழ கருப்பையா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார் இந்த அரசானது பிரதமர் அவர்களுக்கு கைக்கூலியாக அடிமைத்தனமும் மாறி விட்டது எனவே இன்னும் இருக்கும் ஒன்றரை ஆண்டுகளில் அவர்களது முழுசு சுயரூபம் தெரிய வரும் அப்போது அடுத்தபடியாக கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது திமுக மட்டும்தான் எனவே மக்களிடையே பெரிய ஆதரவு பெற்று வருகின்றன கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இருக்கும் இரண்டு மொழிகளில் ஒன்றை எடுக்க வேண்டும் என்று கூறுகிறார் மத்தியில் இரண்டு மொழி பத்தாது என்று மூன்றாவதாக ஒரு மொழி திணிக்கப்படுகிறது இந்தியை முழுவதுமாக எதிர்த்த ஒரே கட்சி திமுக மட்டும் தான் மேகதாது அணைக்கான தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கு பதிலாக காவிரி ஆற்று தான தீர்மானத்தை கொண்டு வருவது நல்லது

Conclusion:கூடங்குளம் அணுமின் நிலையம் ஆனது மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது நீங்கள் சிமெண்ட் விளக்கு வைத்து கூட வாழ்ந்து விடலாம் ஆனால் கூடங்குளத்திலிருந்து வரும் மின்சாரத்தை பயன்படுத்தி பெரிய பாதிப்பு உண்டாக்கினால் தமிழினம் அழிந்து போகும் நிலை என பழ கருப்பையா அவர்கள் கருத்து தெரிவித்தனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.