14ஆவது ஊதிய ஒப்பந்தத்தை உடனடியாக அமல்படுத்தக்கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று(பிப்.25) வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் காஞ்சிபுரம், ஓரிக்கை, உத்திரமேரூர் உள்ளிட்ட பணி மனைகளிலிருந்து 25 சதவீத அளவு பேருந்துகளே அதிமுக தொழிற்சங்கத்தினர் மூலம் இயக்கப்படுகிறது. குறைந்த அளவு பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், வெளியூர் செல்லும் பொது மக்கள், பணிக்கு செல்வோர் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் போக்குவரத்து பணிமனை முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் ரயில் சேவையினை அதிகப்படியான மக்கள் பயன்படுத்துவதால், ரயில்களில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.
இதையும் படிங்க : தா. பாண்டியன் உடல்நிலை கவலைக்கிடம்!