காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாத்தூர் கபிலன் தெருவில் வசித்துவருபவர் சரவணன். இவரது மகன் பார்த்திபன் (23) ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவருகிறார்.
இந்நிலையில் இன்று (அக் 16) வேலைக்குச் சென்ற பார்த்திபன் வேலை முடித்துவிட்டு ஒரகடத்திலிருந்து தன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் மாத்தூர் சர்வீஸ் சாலையில் வரும்போது பின்னால் வந்த லாரி மோதியதில் கீழே விழுந்துள்ளார். பின் அவர் மீது லாரியின் சக்கரம் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பார்த்திபன் உயிரிழந்தார்.
உடனே தகவலறிந்து விரைந்துவந்த ஒரகடம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைக் கைதுசெய்து விபத்து குறித்து விசாரித்துவருகின்றனர்.
மேலும், வேலைக்குச் சென்று வீடு திரும்பிய இளைஞர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.