ETV Bharat / state

சிலிண்டர், குடிநீர் கேன்களில் தேர்தல் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டிய மாவட்ட ஆட்சியர்

author img

By

Published : Mar 19, 2021, 12:55 PM IST

காஞ்சிபுரம்: நூறு விழுக்காடு வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கீழ்கதிர்பூர் அருகே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு 100 விழுக்காடு வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் மாவட்ட நிர்வாகங்களுக்கு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அதனடிப்படையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கலை நிகழ்ச்சிகள், பேரணிகள், சுவரொட்டிகள், வில்லுப்பாட்டு நிகழ்சிகள், மாதிரி வாக்குபதிவு மையம், ரங்கோலி என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.
அதன் ஓரு பகுதியாக நேற்று (மார்ச் 18) காஞ்சிபுரம் அடுத்த கீழ்கதிர்பூர் அருகே உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு தனியார் எரிவாயு சிலிண்டர் குடோனிலுள்ள சிலிண்டர்கள், தனியார் குடிநீர் உற்பத்தி ஆலையிலுள்ள குடிநீர் கேன்களில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என ஸ்டிக்கர்கள் ஒட்டி, "வாக்குப்பதிவு அன்று முகக்கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடைமுறைகளை பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தி கட்டாயம் வாக்களிப்போம்" என அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயசுதா, மகளிர் திட்ட இயக்குநர் சீனிவாச ராவ், மகளிர் திட்ட அலுவலர்கள் எழிலரசன், வீரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.