தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 11ஆம் தேதி மாவட்டத்தில் நடைபெறும் வளர்ச்சி திட்டப் பணிகள், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கைப் பணிகள் ஆகியவை குறித்து ஆய்வு செய்ய காஞ்சிபுரம் செல்ல உள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரம் செல்லும் முதலமைச்சரை வரவேற்பது குறித்த அதிமுக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் வி.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.
இதில் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் பா.பெஞ்சமின், அதிமுக நிர்வாகிகள் அரசின் சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு, கட்டுப்பாடான முறையில் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தாமல் முதலமைச்சரை வரவேற்க வேண்டும் என்றும், கட்சி நிர்வாகிகள் சாலை ஓரங்களில் விளம்பர பேனர்களை வைக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அவர் அவருக்கு ஒதுக்கப்படும் இடங்களில் முகக்கவசங்கள் அணிந்து, தனி மனித இடைவெளி கடைப்பிடித்து நின்று முதலமைச்சரை வரவேற்கும் பதாகைகளையும் கட்சிக் கொடிகளையும் கைகளில் ஏந்தி அவரை வரவேற்கலாம் என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: வட்டாட்சியரை அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்த இளைஞர் கைது