காஞ்சிபுரம்: உலக பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (செப் 10) சாமி தரிசனம் செய்தார். மேற்கொண்டார். இவரது வருகைக்காக 2 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் காரணமாக நீண்ட நேரமாக பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
நிர்மலா சீதாராமனுக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட வருவாய்த்துறை, அறநிலையத்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன்பின் சீதாராமன் தாமரை மலர்கள், வஸ்திரங்கள், பழங்களை காமாட்சியம்பாளுக்கு படைத்தார். அதன்பின் பேட்டரி கார் மூலம் காமாட்சி அம்மன் கோயிலில் உள்ள பிரகாரத்தில் சுற்றுவந்து, புறப்பட்டு சென்றார்.
பக்தர்கள் கடும் அவதி: இவரது வருகையையொட்டி காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகளும், வெளி மாநில பக்தர்களும் கடும் அவதிக்குள்ளாகினர்.
இதையும் படிங்க:புதிய கல்விக் கொள்கை உயர்கல்விக்கு பல வாய்ப்புகளைத் தந்துள்ளது - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்