காஞ்சிபுரம்: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத்தின் பெற்றோரிடம் ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. அலுவலர்கள் இன்று (டிசம்பர் 15) விசாரணை மேற்கொண்டனர்.
நான்கு மணி நேர விசாரணைக்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சித்ராவின் மாமனார் ரவிச்சந்திரன் கூறுகையில், "கடந்த ஆறு நாட்களாக காவல்துறை விசாரணை நடைபெற்று வருகிறது. இன்று (டிசம்பர் 15) ஆர்.டி.ஓ-விடம் எங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறினோம். இன்று என்னுடைய மகன் விசாரணையில் கலந்து கொண்டு அவர் தரப்பு நியாயத்தை கூறியிருக்க வேண்டும். ஆனால் நேற்று அவசர கதியில் அவரை கைது செய்து விட்டார்கள்.
என்ன நடக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. யாரை காப்பாற்றுவதற்காக இந்த கைது சம்பவம் நடந்தது என்று எனக்கு புரியவில்லை. சித்ராவிடம் இருந்து பணமோ, பொருளோ எப்போதும் நாங்கள் கேட்டதில்லை. வரதட்சணை கொடுமை இல்லை. என்ன செய்ய முடியுமோ அதைச் செய்யுங்கள் என்று தான் கூறியிருந்தோம்" என்றார்.
இதையும் படிங்க: சித்ரா தற்கொலை விவகாரம்! - மாமனார், மாமியாரிடம் விசாரணை!