ETV Bharat / state

5 நிமிடங்களில் முடிந்த மாநகராட்சி மாதாந்திர கூட்டம் - தீர்மானங்களை கிழித்த அதிமுக உறுப்பினர்கள்!

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மாநகராட்சி மாதாந்திர கூட்டம் ஐந்து நிமிடங்களிலேயே முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டதால், அக்கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களை அதிமுகவினர் கிழித்து வீசினர்.

5 நிமிடங்களில் முடிந்த மாநகராட்சி மாதாந்திர கூட்டம் - தீர்மானங்களை கிழித்த அதிமுக உறுப்பினர்கள்!
5 நிமிடங்களில் முடிந்த மாநகராட்சி மாதாந்திர கூட்டம் - தீர்மானங்களை கிழித்த அதிமுக உறுப்பினர்கள்!
author img

By

Published : Jul 1, 2022, 10:20 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியின் மாதாந்திர கூட்டம் மேயர் மகாலட்சுமி யுவராஜ் மற்றும் துணை மேயர் குமரகுருநாதன் ஆகியோர் தலைமையில் நேற்று (ஜூன் 30) மாலை நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் மாநகராட்சி 36 ஆவது வார்டு பகுதியில் தற்செயல் தேர்தல் நடைபெறுவதால், அந்த மண்டலத்தில் உள்ள மாமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

இந்நிலையில் கூட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தீண்டாமை உறுதிமொழியினை, மாநகராட்சி மேயர் தலைமையில் ஏற்றனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி மேயர், இக்கூட்டத்தில் 33 தீர்மானங்களில் தேர்தல் நடைபெறும் மூன்றாவது மண்டலத்தில் உள்ள தீர்மானங்கள் தவிர, அனைத்தும் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.

தீர்மானங்களை கிழித்த அதிமுக உறுப்பினர்கள்

இவ்வாறு அறிவிப்பு வெளியான அடுத்த சில நொடிகளிலே கூட்டம் நிறைவுற்றதாக அறிவித்துவிட்டு கலைந்து சென்றார். மாநகராட்சி மாதாந்திர கூட்டம் ஐந்து நிமிடங்கள் கூட நடைபெறாமல் முடிந்ததால், அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் வழங்கப்பட்ட தீர்மானங்களை கிழித்து குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றனர். இதனால் பதற்றம் நிலவியது.

ஏற்கனவே கடந்த மாதம் நடைபெற்ற மாநகராட்சி மாதாந்திர கூட்டத்தில், மாநகராட்சி மேயருக்கு ரூ.75 லட்சத்தில் புதிதாக குடியிருப்பு கட்டுவதற்கான தீர்மானம் உள்ளிட்ட சில தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். எனவே இதற்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, அத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இருப்பினும் மாமன்ற உறுப்பினர்கள், பல தீர்மானங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அக்கூட்டத்தையும் மேயர் நிறைவுற்றதாக அறிவித்துவிட்டு கலைந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கருவில் இருக்கும் சிசு ஆணா பெண்ணா என அறிந்து, கருக்கலைப்பு செய்த நபர் மீது பாய்ந்தது குண்டாஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.