காஞ்சிபுரத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் வேட்பாளராக அக்கட்சியின் மாநில செயலாளர் எஸ்.கே.பி.பி. கோபிநாத் போட்டியிடுகிறார். இவர் தேர்தல் பார்வையாளரிடம் இன்று (ஏப்.5) புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், “நாளை வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் காஞ்சிபுரம் நகர பகுதிகளில் அரசியல் கட்சியினர் பணப் பட்டுவாடாவை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், ஆதாரத்துடன் புகார் அளித்தும் இது வரையில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை பலமுறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்காததால், சுமார் 60 விழுக்காடு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தப் புகார் மனுவை பெற்றுக் கொண்ட, தேர்தல் பார்வையாளரான குப்தா, புகாரை உடனடியாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைப்பதாகவும், மாவட்ட தேர்தல் அலுவலருக்கும் இது குறித்து தகவல் தெரிவிப்பதாகவும் உறுதியளித்தார்.
இதையும் படிங்க:துரைமுருகன் மீது வழக்குப்பதிவு!