ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாது - உடுமலை ராதாகிருஷ்ணன்

காஞ்சிபுரம்: உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாகக் கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

udumalai radhakrishnan press meet
udumalai radhakrishnan press meet
author img

By

Published : Jan 5, 2020, 9:01 PM IST

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம் சார்பில் விளக்கு பூஜை, சிறப்பு யாகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, "உள்ளாட்சித் தேர்தலை பொறுத்தவரை அதிமுக முழு வெற்றியை பெற்றுள்ளது. அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் அனைவரும் ஏழை நடுத்தர மக்களை சார்ந்தவர்களாவர். ஊராட்சி மன்றத் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் என நான்கு வாக்குகளை அளிக்கிறார்கள்.

உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளர் சந்திப்பு

இவ்வாறு நான்கு பதவிகளுக்கு கிராமப்பகுதி மக்கள் வாக்களிக்கும்போது பெரும்பாலான வாக்குகள் செல்லாத வாக்குகளாக மாறியுள்ளது. அவ்வாறு செல்லாத வாக்குகளாக கருதப்படும் அனைத்தும் அதிமுகவின் வாக்குகளாகும். இதுபோன்ற சூழ்நிலையிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இதனால் பல இடத்தில் திமுக வெற்றி பெற்றதாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்றார்.

இதையும் படிங்க: இரு வேட்பாளர்கள் இடையே மோதல்: வெளியான வீடியோ காட்சி!

Intro:உள்ளாட்சி தேர்தலில் கிராம பகுதியில் ஒரு வாக்காளருக்கு 4 வாக்குகள் இருந்ததாலேயே ஒரு சில பகுதிகளில் அதிமுக வெற்றியை இழந்தது.மேலும் ஏழை எளிய நடுத்தர மக்களின் செல்லாத வாக்குகள் அனைத்தும் அதிமுகவிற்கு சேரவேண்டிய வாக்குகள் எனவே ஒருபோதும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்று ஏற்றுக்கொள்ள முடியாது என உடுமலை ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் பேட்டி

Body:காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம் சார்பில் விளக்கு பூஜை சிறப்பு யாகம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சாமி தரிசனம் செய்து பத்திரிக்கையாளர் சந்தித்த கால்நடை துறை பராமரிப்பு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் கூறியதாவது

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை அதிமுக முழு வெற்றியை பெற்றுள்ளது.
அதிமுகவிற்கு வாக்களித்தவர்கள் அனைவரும் ஏழை நடுத்தர மக்களை சார்ந்தவர்கள்.கிராம பகுதியில் இருப்பவர்கள் உள்ளாட்சி தேர்தலில் ஒரு வாக்கு அளிப்பதில்லை.ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர், மாவட்ட குழு உறுப்பினர் என நான்கு வாக்குகளை அளிக்கிறார்கள்.

இவ்வாறு நான்கு பதவிகளுக்கு கிராமப்பகுதி மக்கள் வாக்களிக்கும் போது பெரும்பாலான வாக்குகள் செல்லாத வாக்கு களாக மாறி உள்ளது செல்லாத வாக்குகள் அனைத்தும் அதிமுக வின் வாக்குகளாகும்.

இதுபோன்ற சூழ்நிலையிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். இதுபோன்ற நிலைதான் பல இடத்தில் இருந்ததனால் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றதாக ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

பல வயதான வாக்காளர்கள் தங்களுடைய கையெழுத்துக்கு பதிலாக கைரேகையை பயன்படுத்துகிறார்கள். இதனால் தேர்தலில் வாக்காளருக்கு கொடுக்கப்பட்ட சின்னம் பொருத்திய சீட்டுகளை கொண்டு வாக்களிக்கும் பொழுது தவறுதலாக கை பட்டு விட்டாலும் அது செல்லாத வாக்குகளாக மாறிவிடுகிறது.எனவே கிராமப் பகுதிகளில் ஏழை மற்றும் நடுத்தர வாக்காளர்களின் செல்லாத வாக்குகள் அதேபோல் வாக்களிக்காத பலபேரின் வாக்குகள் அதிமுகவிற்கு வரவேண்டிய வாக்குகள்.

கிராம பகுதியில் ஒரு வாக்காளருக்கு 4 வாக்குகள் இருந்ததாலேயே ஒரு சில பகுதிகளில் அதிமுக வெற்றியை இழந்தது. 50 ஆயிரம் வாக்காளர்கள் இருக்கக்கூடிய கவுன்சிலர் பதவியில், ஏறத்தாழ 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் செல்லாத வாக்குகள் ஆக இருந்தது. செல்லாத வாக்குகள் அனைத்தும் ஏழை எளிய மக்களால் அதிமுகவிற்கு வந்து சேர வேண்டிய வாக்குகள் இருப்பினும் அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒரே வாக்கு என்பதனால் அந்த அனைத்து வாக்குகளும் அதிமுகவிற்கவே கிடைக்கும்.எனவே அதிமுக தான் முழுமையான வெற்றியை உள்ளாட்சித்தேர்தல் பெற்றுள்ளது

Conclusion:என கால்நடை துறை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் காஞ்சிபுரத்தில் பேட்டி அளித்துள்ளார்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.