ETV Bharat / state

ஒரு சிறப்பான ஆட்சி நடப்பதற்கு நமது முதலமைச்சரின் நிர்வாகத்திறன் தான் காரணம் - அமைச்சர் எ.வ. வேலு

அதிமுகவினர் ஆறரை லட்சம் கோடி கடனை விட்டுச்சென்றுள்ள நிலையிலும், ஆண்டிற்கு 48 லட்சம் கோடி வட்டி கட்டவேண்டிய சூழ்நிலையிலும்,மோசமான, கடினமான, கையில் பணம் இல்லாத நிலையில் இருக்கிற பொழுது கூட, ஒரு சிறப்பான ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர், அதற்கு அவருடைய அட்மினிஸ்ட்ரேட்டிவ் பவர் தான் காரணம் என காஞ்சிபுரத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

ஒரு சிறப்பான ஆட்சி நடப்பதற்கு  நமது முதலமைச்சரின் அட்மினிஸ்ட்ரேட்டிவ் பவர் தான் காரணம்

author img

By

Published : May 1, 2022, 9:28 PM IST

காஞ்சிபுரம் அருகே காரப்பேட்டையில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனையில் ரூபாய் 118 கோடி ரூபாய் செலவில் புற்றுநோய் சிகிச்சைக்காக அதிநவீன வசதிகளுடன் மேன்மைமிகு சிகிச்சை மையம் 500 படுக்கை வசதிகளுடன் இரண்டு அடுக்கு மாடி வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. மேலும் தற்பொழுது நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கூடுதலாக 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து கூடுதலாக 250 படுக்கைகளுடன் மேலும் இரண்டு அடுக்கு மாடி என 4 அடுக்கு மாடிகளுடன்,750 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனையாக கட்டப்பட உள்ளது.

இந்நிலையில் இரண்டு அடுக்கு மருத்துவமனை கட்டடப்பணிகள் வேகமாக நடைபெற்று முடிந்து வரும் நிலையில், இப்பணிகளை தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவிக்கையில், "தமிழ்நாட்டில் இந்த ஐந்து ஆண்டுகளில் கூடுமானவரை ஏறத்தாழ தரைப்பாலங்கள் இல்லாத வகையில் மேம்பாலங்கள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு நாங்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறோம்.

அதிமுகவினர் ஆறரை லட்சம் கோடி கடனை விட்டுச்சென்றுள்ள நிலையிலும், ஆண்டிற்கு 48 லட்சம் கோடி ரூபாய் வட்டி கட்டவேண்டிய சூழ்நிலையிலும், மோசமான, கடினமான, கையில் பணம் இல்லாத நிலையில் இருக்கிற பொழுது கூட, ஒரு சிறப்பான ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் நமது முதலமைச்சர், அதற்கு அவருடைய அட்மினிஸ்ட்ரேட்டிவ் பவர் தான் காரணம், ஓராண்டு நிறைவு செய்வதற்கு முன்னாலேயே 50 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டார்.

இன்னும் இருப்பது 50 விழுக்காடு மட்டும்தான். அதனால் 4 ஆண்டுகளில் ஏறத்தாழ கூடுமானவரையில் இந்த நிதி நிலைக்கு ஏற்ப மேம்பாலங்கள் கட்டி முடித்து விடுவோம். போக்குவரத்து நெரிசல் காரணமாக சென்னைக்கு செல்ல காலதாமதம் ஏற்படுகிறது.

அதனையறிந்து அதற்குத் தீர்வுகாணும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், பரனூரில் இருந்து தாம்பரம் வரையிலும், காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரிலிருந்து பூந்தமல்லி வரையிலும் மேல்மட்ட சாலை அமைக்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் டெல்லி சென்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் கோரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டு அதற்கானப் பணிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.

ஒரு சிறப்பான ஆட்சி நடப்பதற்கு நமது முதலமைச்சரின் அட்மினிஸ்ட்ரேட்டிவ் பவர் தான் காரணம்

இந்த ஆய்வின் போது காஞ்சிபுரம் ஆட்சியர் மா.ஆர்த்தி, காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம்,எம்எல்ஏ க.சுந்தர், மாவட்ட வருவாய் அலுவலர் சிவ.ருத்ரய்யா, மேயர் மகாலட்சுமி யுவராஜ், புற்றுநோய் மருத்துவமனையின் இயக்குநர் வி.சீனிவாசன், நிலைய மருத்துவ அலுவலர் எஸ்.மனோகரன், பொதுப்பணித்துறை தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன், கண்காணிப்புப் பொறியாளர் ராஜசேகர், செயற்பொறியாளர் கார்த்திகேயன் ஆகியோர் உட்படப் பலரும் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: மலை ரயிலின் டிக்கெட் பரிசோதகர் ஓய்வு - மெல்லிசையால் மயக்கியவரை வாழ்த்தி வழி அனுப்பிய பயணிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.