ETV Bharat / state

அதிமுக ஆட்சியில் அறிவித்த திட்டங்களுக்கு பொறுப்பேற்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு - ev velu meeting with official

அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் அறிவித்த திட்டங்களுக்கு பொறுப்பேற்க முடியாது என்று  பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

minister-
அமைச்சர் எ.வ.வேலு
author img

By

Published : Jul 15, 2021, 7:45 AM IST

காஞ்சிபுரம் : மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில், ஊரகத் தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலையில், நெடுஞ்சாலை் மற்றும் பொதுப்பணித்துறைபணிகள் தொடர்பாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்ட அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையில் உள்ள முடிவுற்ற பணிகள், நிலுவையில் உள்ள பணிகள் உள்ளிட்டவை குறித்து மூன்று மாவட்ட அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, "தமிழ்நாடு முழுவதும் மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, கூட்ட நெரிசல் உள்ள நகர் பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன்படி, மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

minister
மூன்று மாவட்ட அலுவலர்களுடன் ஆய்வு

திண்டிவனத்திலிருந்து செங்கல்பட்டு வரையிலான NH45 நெடுஞ்சாலையில் சிறப்பு விருந்தினர்கள்,மாநிலத்தில் உள்ள அலுவலர்கள் பயணிக்கிறார்கள். அவ்வாறு பயணிக்கக்கூடிய இடத்தில் சுற்றுலா மாளிகை தேவை என்ற கருத்து உள்ளது. அதனை முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று அப்பகுதியில் சுற்றுலா மாளிகை அமைப்பதற்கு வேண்டிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சுமார் 10,000 கிலோ மீட்டர் சாலைகளை ஐந்தாண்டுகளுக்குள் பகுதி பகுதியாக அந்த சாலைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அமைத்துத்தர முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். நபார்டு திட்டத்தின் கீழ் கிராம சாலைகள் அமைக்க தேவையான முயற்சிகளை நெடுஞ்சாலைத்துறை மேற்கொள்ளும்.

தலைநகரை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள சாலைகள்தான் தலைநகர் சென்னை செல்வதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே மூன்று மாவட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பணிகள் செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காகத்தான் இந்த ஆய்வுக் கூட்டத்தை நடத்தியுள்ளோம்.

அமைச்சர் எ.வ.வேலு

மேலும், அதிமுக ஆட்சியில் 110 விதியின் கீழ் எண்ணற்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டது. அதற்கு கணக்கே கிடையாது.110 விதியின் கீழ் 110திற்கும் மேற்பட்ட திட்டங்கள் அறிவித்திருக்கிறார்கள். அதற்கு நான் பொறுப்பு ஏற்க முடியாது.

இந்த ஆட்சியில் நாங்கள் என்ன சொல்கிறோமோ அதற்கு மட்டுமே நான் பொறுப்பேற்று் கொள்ளலாம். அதற்கு முதலமைச்சர் உறுதுணையாக இருந்து பணத்தை ஒதுக்குவார். கட்டாயம் செய்வோம். திமுக ஆட்சியை பொறுத்தவரையில் நாங்கள் அறிவிப்பது நிச்சயம் பயன்பாட்டிற்கு வரும்" என அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார்.

இதையும் படிங்க: நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும் - காவரி விவகாரத்தில் கமல் கருத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.