காஞ்சிபுரத்தில் இன்று (செப் 1) வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் விக்ரமராஜா கலந்துகொண்டு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், இந்த கரோனா தொற்று காலகட்டத்தை பயன்படுத்தி வங்கிகளில் அதிக அளவு வட்டி வாங்குவது கண்டனத்துக்குரியது. வங்கிகள் அனைத்தும் சேவை நோக்குடன் தொடங்கப்பட்டது. வங்கி மேலாளர்கள் தற்போழுது கந்து வட்டிக்காரர்கள் போல் செயல்படுவது கண்டனத்துக்குரியது. இந்த காலகட்டத்தில் சுங்கக் கட்டணத்தை உயர்த்தியது ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனால் விலைவாசி உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் ஏழை கூலி தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பட்ட மக்களும் பாதிக்கப்படுவார்கள். காலாவதியான சுங்கச்சாவடிகள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். சுங்கச்சாவடிகள் கட்டண கழகமாக மாறி உள்ளது. இதனை கண்டித்து வணிகர் சங்கம் விரைவில் போராட்டம் அறிவிக்கும் என தெரிவித்தார்.