செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ராஜகோபால் தெருவில் வசிக்கும் அப்துல் சலிம் என்பவர் உறவினர் வீட்டிற்கு, இந்தோனேசியாவிலிருந்து நான்கு ஆண் நான்கு பெண் உள்பட எட்டு பேர் கடந்த நான்காம் தேதி இந்தியா வந்துள்ளனர். இவர்கள் 21ஆம் தேதி சென்னை வந்து, அன்றே மதுராந்தகத்தில் உறவினர் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இதனால், இவர்களை நேற்று மருத்துவக் குழுவினர் முழு பரிசோதனை செய்துள்ளனர். பரிசோதனையில் வைரஸ் தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இருந்தாலும் இவர்களை வரும் 31ஆம் தேதிவரை வீட்டில் தனிமையில் வைக்க மருத்துவக் குழு உத்தரவிட்டுள்ளது. அதன் பின்னர், மருத்துவக் குழுவினர் அவர்களின் வீட்டில் நோட்டீஸ் ஒட்டினர்.
இதையும் படிங்க: விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: மேலும் இருவர் உயிரிழப்பு