காஞ்சிபுரம்: மாநகராட்சி மேயர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் 50 மாமன்ற உறுப்பினர்கள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்தனர்.
இதில், திமுக தலைமை கழகம் அறிவித்த கவுன்சிலர் மகாலட்சுமி யுவராஜ் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுகவைச் சேர்ந்த சூர்யா சோபன்குமாரை விடக் கூடுதலாக வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றார்.
மேயரானார் மகாலட்சுமி யுவராஜ்
இதையடுத்து அவருக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் நாராயணன் வழங்கினார்.
மேலும், காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் பெண் மேயருக்கு 5 கிலோ வெள்ளியிலான செங்கோல், கவுன் வழங்கப்பட்டது. அதன்பின்னர், அவர் மேயர் இருக்கையில் மகாலட்சுமி யுவராஜ் அமர்ந்தார்.
இதையும் படிங்க: கும்பகோணத்தில் மேயரான ஆட்டோ ஓட்டுநர்!