திருவள்ளூர்: அரண்வாயில் பகுதியிலுள்ள பீர் தொழிற்சாலையிலிருந்து ராணிப்பேட்டை பகுதிக்கு பீர் வகை மதுபானங்களை லாரி ஒன்று ஏற்றிச்சென்றது.
அப்போது காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் வழியாகச் சென்று கொண்டிருந்த லாரி, கட்டுப்பாட்டை இழந்து வாரணவாசி அருகில் சாலையில் தடுப்பில் ஏறி எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இவ்விபத்தில் லாரியில் இருந்த பீர் பாட்டில்கள் அனைத்தும் கீழே சரிந்ததில், பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மதுபானங்கள் நாசமடைந்தன.
பின்னர் சேதமடையாமல் இருந்த குப்பிகளை மட்டும் மாற்று வாகனத்தின் மூலம் ராணிப்பேட்டைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இந்த வாகனத்திற்குப் பின்னால் வாகனம் ஏதும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.