காஞ்சிபுரத்தில் உலக பிரசித்திப் பெற்ற காஞ்சி ஸ்ரீ காமாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் சாலையோர கடைகள் உள்ளன. இதில் கணவரால் கைவிடப்பட்டு கைக்குழந்தையுடன் சித்ரா என்ற பெண்மணி என்பவர் காமாட்சி அம்மன் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் அருகில் சாலையோர வளையல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.
அவர் நடத்தி வரும் வளையல் கடையில், தனக்கு 50 ஆயிரம் ரூபாயை மாமூல் ஆக கொடுக்க வேண்டும் என மிரட்டல் விடுத்தும், மாமூல் கொடுக்கவில்லை என்றால் கடையை அகற்றிடுவேன் எனவும் அதிமுகவின் மகளிர் அணி நகர இணைச்செயலாளர் திலகவதி என்பவர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், அதிமுக பெண் நிர்வாகி திலகவதி கேட்ட மாமூல் பணத்தை கொடுக்காததால் பெண்மணி சித்ராவை திலகவதி ஆபாச வார்த்தைகளால் திட்டியும், கடுமையாகத் தாக்கியும் அடிதடி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், பாதிக்கப்பட்ட பெண்மணி சித்ரா சிவகாஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர், மூன்றுபிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து அதிமுக பெண் நிர்வாகி திலகவதியை கைது செய்தனர். தொடர்ந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பள்ளி மாணவி கடத்தல்... காட்டிக்கொடுத்த செல்ஃபோன் சிக்னல்... வசமாக சிக்கிய இருவர்