காஞ்சிபுரம் மாவட்டம் விஷ்ணு காஞ்சியில் அமைந்துள்ள அரசு இசைப்பள்ளியில் 2020 - 2021 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ள துண்டு பிரசுரம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, "13 வயது முதல்25 வயதுக்குள் இருக்க வேண்டும். கல்வி தகுதி 7 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அசல் மாற்று சான்றிதழ் கட்டாயம், ஆதார் அட்டை, வங்கி புத்தகம் நகல், பாஸ்போட் புகைப்படம். ஆண்டுக்கான கல்வி கட்டணம் 152 ரூபாய் செலுத்த வேண்டும். காலை 10.00 மணி முதல் மாலை 4.00 வரை வகுப்புகள் நடைபெறும் மூன்று ஆண்டு முழு நேர கல்வியாக பயின்று முடித்த பின்பு சான்றிதழ் வழங்கப்படும்.
இது தவிர, இலவச பஸ் பாஸ், இலவச மிதிவண்டி, ஆண்டிற்கு 4 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை (மாதம் 400) உள்ளிட்ட சலுகைகள் பள்ளியில் வழங்கப்படுகின்றன. தேவாரம், குரலிசை, நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் பயிற்றுவிக்கப்படும்.
எனவே இசை மீது ஆர்வமுள்ள அனைவரும் இசைப்பள்ளியில் சேர்ந்து பயன்பெற அன்போடு அழைக்கின்றோம்" என குறிப்பிட்டிருந்தது. மேலும் இசைப்பள்ளி சேர்க்கை தொடர்பான தகவல்களுக்கு 9443283313 என்ற அலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:'ஸ்டாலின் அரசியலுக்காக ஆணையம் பற்றி பேசிவருகிறார்' - அமைச்சர் தங்கமணி