காஞ்சிபுரம் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து காஞ்சிபுரம் பெரு நகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார்பாளையம் 14ஆவது வட்டத்தில் உள்ள திருவேங்கம்மன் தெருவில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் அங்கன்வாடி மைய கட்டிட பணிக்கும், 38ஆவது வட்டம் யாக சாலை மண்டபம் தெருவில் ரூ. 13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டடம் பணிக்கும் , 44ஆவது வட்டம் புண்ணியகோட்டீஸ்வரர் கோயில் தெருவில் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி என மொத்தம் ரூ.34 லட்டசத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்தப் பணிகளை இன்று (ஜன.31) காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் காஞ்சிபுரம் நகர செயலாளர் சன்பிராண்ட் கே.ஆறுமுகம், நகராட்சி பொறியாளர் ஆனந்தஜோதி, திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: நாகலாபுரம் சுகந்தி மீது புகாரளித்த டிக்டாக் புகழ் திவ்யா