காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் வட்டம் வல்லக்கோட்டை அருகே அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடிமாதம் கிருத்திகை திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
அந்தவகையில், வரும் வெள்ளிக்கிழமை அன்று ஆடி கிருத்திகை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.