காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வாகன சோதனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில், காஞ்சிபுரம், பெரியார் நகர் அருகே நடைபெற்ற வாகனச் சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட இரண்டு லட்சத்து 89 ஆயிரத்து 500 ரூபாய், மூன்று லட்சம் மதிப்பிலான 67 பட்டு சேலைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல், பொன்னேரி கரை சந்திப்பில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கலைச்செல்வி தலைமையிலான தேர்தல் பறக்கும் படைக் குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, கர்நாடக மாநிலத்திலிருந்து வந்த காரை சோதனை செய்ததில், உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து, அதனை வருவாய்க் கோட்டாட்சியர் பெ. ராஜலட்சுமியிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: ‘இந்தியாவையே பிச்சைக்கார நாடாக மாற்றிய பாஜக’ - சீமான் கொந்தளிப்பு