உலக பிரசித்திப்பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் பிரம்மோற்சவ திருவிழா பிப்ரவரி 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான இன்று காலை காமாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் வெள்ளி பத்ரபீடம் வாகனத்தில் எழுந்தருளினார்.
வெள்ளி பத்ரபீடம் வாகனத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன் மேளதாளங்கள் முழங்க தீபாராதனைகள் நான்கு ராஜ வீதிகளில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டார். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.
மொத்தம் 13 நாள்கள் நடைபெறும் இந்தப் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்வான வெள்ளித் தேர் உற்சவம் மார்ச் 7ஆம் தேதி (நாளை) இரவு வெகுவிமரிசையாக நடைபெறுகிறது.
இதையும் படிங்க: பெண் குழந்தைக்கு கள்ளிப்பால்! பெற்றோரின் கொலைவெறி!