காஞ்சிபுரம்: வைணவ பாரம்பரியத்தில் திருவரங்கம், திருவேங்கடம் ஆகிய திருத்தலங்களுக்கு அடுத்ததாக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் அத்திவரதர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் உள்ள 5 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி கோயில் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயா தலைமையில் அறநிலையத்துறை ஆய்வாளர் பிரித்திகா முன்னிலையில் கடந்த 9 மாதங்களுக்குப் பிறகு பக்தர்கள் காணிக்கை செலுத்த வைக்கப்பட்ட 5 உண்டியல்கள் திறக்கப்பட்டன. திறக்கப்பட்ட உண்டியல்களில் இருந்த காணிக்கையை கோயில் பணியாளர்கள் குழுவினர், பொதுமக்கள் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
இதில், பக்தர்களிடம் இருந்து காணிக்கையாக ரூ. 51 லட்சத்து 86ஆயிரத்து 327 பணமாகவும் , 89 கிராம் தங்கம், 556கிராம் வெள்ளிப் பொருள்களும் கிடைக்கப்பெற்றதாக இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் தியாகராஜன் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'ராகுல் இளம் தலைவர்; பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார்' - குஷ்பூவின் குசும்பு