பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா உற்சவத்தின் ஐந்தாம் நாளில் ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ கைலாச பீட 10 தலை ராவணன் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மேள தாளங்கள் முழங்க சிவ வாத்தியங்கள் ஒலிக்க 10 தலை ராவணன் வாகனம் 4 ராஜவீதிகளில் வீதி உலா வந்தது. இந்த வீதி உலாவை வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.
இதையும் படிங்க:
அண்ணாமலையார் கோயில் யானை ருக்குவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம்!