ETV Bharat / state

களைகட்டியது காஞ்சிபுரம்... தரிசனம் தரும் வரதராஜ பெருமாள்... - varatharaja perumal

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரில் இருந்து வெளியே வந்து தரிசனம் தரும் வரதராஜ பெருமாளை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவித்துள்ளனர்.

தரிசனம் தரும் வரதராஜ பெருமாள்
author img

By

Published : Jul 1, 2019, 10:15 AM IST

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உலக பிரசித்திப் பெற்றது. இந்தக் கோயிலிருந்து வரதராஜ பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரில் இருந்து வெளியே வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார். அந்த வகையில் 1979 ஆண்டிற்குப் பிறகு 40 ஆண்டுகள் கழித்து தற்போது தான் அனந்த சரஸ் குளத்திலிருந்து வெளியே வந்து பக்தர்களுக்குக் தரிசனம் அளிக்கிறார்.

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை 48 நாட்களுக்கு பக்தர்களுக்கு காட்சி தர இருக்கும் வரதராஜ பெருமாளை தரிசிக்க, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக போக்குவரத்து நேரிசலை சமாளிக்க ஒளிமுகம்பேட்டை, செவிலிமேடு, பெரியார் நகர் ஆகிய மூன்று இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வேறு பகுதிகளிலிருந்து சொந்த வாகனங்களில் வருபவர்களும், தங்களது வாகனங்களை தற்காலிக பேருந்து நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பார்க்கிங் பகுதியில் நிறுத்திவிட்டு, பேருந்தில் கோயிலுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் சுகாதாரத்துறை சார்பில் கோயிலின் பல்வேறு இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் நகர பகுதியில் 51 வார்டுகளில் வசித்து வரும் உள்ளூர்வாசிகளுக்கு ஒரு முறை இலவச தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமாணி தலைமையில் 2 ஆயிரத்து 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Intro:

Body:Script in Mail

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.