காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஜி.செல்வம் ஆறு லட்சத்து 52 ஆயிரத்து 711 வாக்குகள் பெற்று, அதிமுக வேட்பாளர் மரகதம் குமாரவேலை விட (மூன்று லட்சத்து 81 ஆயிரத்து 628 வாக்குகள்) விட இரண்டு லட்சத்து 71 ஆயிரத்து 83 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
ஜி. செல்வத்தின் படிப்பும், அரசியலும்
சிறுவேடல் ஜி. செல்வம் (44) என்னும் இவர் எம்.காம்., எம்.பில்., எல்.எல்.பி., ஆகிய பட்டயக் கல்வியை கற்றுள்ளார். இவர் மனைவி பெயர் லக்ஷ்மிகா (36). இவரின் பிரதான தொழில் விவசாயம். முன்னாள் திமுக மாவட்டப் பிரதிநிதி, ஒன்றியப் பிரதிநிதி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர், மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு அமைப்பாளர் ஆகிய பதவிகள் திமுக கட்சியில் வகித்துள்ளார்.
தற்போது, வாலாஜாபாத் வடக்கு ஒன்றியச் செயலராக உள்ளார். 2014ஆம் ஆண்டு காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தவர்.