காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்தை முன்னி்ட்டு திரளான பக்தர்கள் வருகிறார்கள். எனவே பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் தற்காலிகமாக 35 ஆயிரம் பக்தர்கள் தங்கும் பெரிய கூடாரம் அமைக்கும் பணியை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா ஆய்வு மேற்கொண்டார்
இதற்கிடையே கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அத்திவரதர் தரிசனம் செய்வதற்கான விஐபிக்கள் செல்லும் வழியில் உரிய பாஸ் இல்லாமல் சிலரை அனுமதித்த காவல் ஆய்வாளரை மாவட்ட ஆட்சியர் அனைவரின் முன்னிலையிலும் ஒருமையில் சரமாரியாக திட்டிய வீடியோ காட்சி வெளியாகி வைரலாக பரவியது.
இதற்கு பலரும் விமர்சனம் தெரிவித்து வந்த நிலையில், ’நான் பாதுகாப்பு கருதி பேசினேன். அதுதவிர தனிப்பட்ட முறையில் எதுவும் இல்லை’ என்று பொன்னையன் விளக்கமளித்துள்ளார்.