காஞ்சிபுரம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ் இரண்டு கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பாரதி நகர் பகுதியில் ரூபாய் 16 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டது.
தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்து கண்காணிக்க காஞ்சிபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் எழிலரசன் வந்தார். அவரை அப்பகுதி பெண்கள் முற்றுகையிட்டு, தங்கள் பகுதியில் பல காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள குறைகளை நிவர்த்தி செய்ய கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் ஆதரவாளர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்- பாஜக அமைச்சர்
பின்னர், அவர் அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக உறுதியளித்தன் பேரில் மக்கள் கலைந்துச் சென்றனர்.