ETV Bharat / state

”மூன்று அமாவாசைகள்தான்...வேண்டிய ஜெயிலை முதலமைச்சர் முடிவு செய்யட்டும்” - ஆர்.எஸ்.பாரதி ஆவேசம் - மத்திய வேளாண் திருத்தச் சட்டம்

காஞ்சிபுரம் : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டமெல்லாம் இன்னும் மூன்று அமாவாசைகள் தான் என்றும், அதற்குள் எந்த ஜெயிலுக்குப் போக வேண்டும் என்பதை அவரே முடிவு செய்து கொள்ளட்டும் என்றும் திமுக மாநிலங்களவை உறுப்பினரும், அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.

மூன்று அமாவாசை தான் முதமைச்சர் பழனிசாமிக்கு ஜெயில் - ஆர்.எஸ்.பாரதி

author img

By

Published : Dec 5, 2020, 3:33 PM IST

Updated : Dec 5, 2020, 4:05 PM IST

மத்திய வேளாண் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மத்திய பாஜக, மாநில அதிமுக அரசுகளைக் கண்டித்தும் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் எதிர்க்கட்சியான திமுக சார்பில் இன்று (டிச.05) கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அமைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.

அப்போது, விவசாயிகளை வஞ்சிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து, மத்திய பாஜக மற்றும் மாநில அதிமுக அரசுக்கு எதிராக கைகளில் கருப்புக்கொடி, பதாகைகளை ஏந்தியவாறு ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து கண்டனக் குரல்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி கண்டன உரையாற்றிப் பேசுகையில், ”மத்திய, மாநில அரசுக்கு எதிராக மக்கள் குரல் எழுப்ப ஆரம்பித்துவிட்டார்கள். ஒரு புரட்சியின் ஆரம்பம் தான் இப்படிப்பட்ட கூட்டம். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டமெல்லாம் இன்னும் மூன்று அமாவாசைகள் தான். இன்னும் மூன்று மாதங்கள் தான். அவர் எந்த ஜெயிலுக்கு போக வேண்டும் என அவரே முடிவு செய்து கொள்ள வேண்டும்.

அமித்ஷா தமிழ்நாடு வந்து போன பிறகு தான் முதலமைச்சருக்கு தைரியம் வந்தது. நீங்கள் அமித்ஷாவை தான் பார்த்துள்ளீர்கள். நாங்கள் ஆளுநராக இருந்த கே.கே.ஷாவையே பார்த்து அரசியல் நடத்தியுள்ளோம். 60 ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் செய்துவரும் எங்களைப் பார்த்து சர்க்காரியா கமிஷன் பற்றி முதலமைச்சர் கேட்கிறார். சர்க்காரியா கமிஷன் பற்றி முதலமைச்சருக்கு என்ன தெரியும்? சர்க்காரியா கமிஷன் பற்றி என்னோடு விவாதிக்க அதிமுகவினர் யார் வந்தாலும் நான் தயார்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜெயலலிதா நினைவுநாள்: ஓபிஎஸ், இபிஎஸ் ட்வீட்!

Last Updated : Dec 5, 2020, 4:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.