ETV Bharat / state

அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் வந்து ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய ஐடி நிறுவனர் - வாக்களித்த ஐடி நிறுவனர்

அமெரிக்காவில் ஐடி நிறுவனம் நடத்திவரும் இந்திய குடிமகன் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதற்காக விமானம் மூலம் காஞ்சிபுரம் வந்து வாக்களித்துள்ளார்.

ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ஐடி நிறுவனர்
ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ஐடி நிறுவனர்
author img

By

Published : Feb 19, 2022, 3:39 PM IST

காஞ்சிபுரம்: தமிழ்நாட்டில் நடைபெற்றுவரும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவையொட்டி காஞ்சிபுரம் மாநகராட்சியில் 50 வார்டுகளுக்கான வாக்குப்பதிவு காலை முதலே தொடங்கி அனைவரும் விறுவிறுப்பான வாக்களித்துவருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாநகராட்சிக்குள்பட்ட அப்பாராவ் பகுதியைச் சேர்ந்த லியாகத் ஷெரீப் என்பவரின் மகனான இம்தியாஸ் ஷெரீப் இன்றைய தினம் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிட அமெரிக்காவிலிருந்து விமானம் மூலம் வந்து காஞ்சிபுரம் தாமல்வார் தெருவிலுள்ள புனித சூசையப்பர் ஆரம்பப் பள்ளி வாக்குப்பதிவு மையத்தில் வாக்களித்தார்.

ஜனநாயகக் கடமையை நிறைவேற்றிய ஐடி நிறுவனர்

இந்திய குடிமகனான இவர் அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சலஸில் சொந்தமாக ஐ.டி. நிறுவனத்தை நடத்திவரும் நிலையில் தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க வேண்டும் என்பதற்காகவே விமானம் மூலம் சொந்த ஊர் வந்து வாக்களித்துள்ளார்.

இதையும் படிங்க: ஹிஜாப்பை அகற்றச் சொன்ன பாஜக முகவர் வெளியேற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.