ETV Bharat / state

காஞ்சியில் ஒரேநாளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கல்! - Kanchipuram district news

கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இன்று ஒரேநாளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை பல்வேறு தொழிற்சாலை நிறுவனங்கள் இணைந்து வழங்கியுள்ளன.

தொழிற்சாலை நிறுவனங்கள்
தொழிற்சாலை நிறுவனங்கள்
author img

By

Published : Jun 2, 2021, 6:49 PM IST

காஞ்சிபுரம்: தொழிற்சாலைகள் நிறைந்த மாவட்டமான காஞ்சிபுரத்தில் கரோனா இரண்டாம் அலை காரணமாக நோய்ப் பரவல் அதிகரித்துவந்த நிலையில் தற்போது முழு ஊரடங்கினால் சற்று பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மருத்துவ உபகரணங்களும், கரோனா நிவாரண நிதிகளும் தாராளமாக வழங்க முன்வரலாம் என மாவட்டத்திலுள்ள தொழில் நிறுவனங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

அதன்பேரில் நாள்தோறும் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கரோனா மருத்துவ உபகரணங்களும், நிவாரண நிதிகளும் குவிந்து வருகின்றன.

அவ்வகையில் இன்று (ஜூன்.02) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் கிளாய் பகுதியில் இயங்கிவரும் டாடா மெடிக்கல் மற்றும் டயக்னாஸ்டிக்ஸ் லிமிடெட் சார்பில் 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான N-95 முகக்கவசம் 2000 எண்ணிக்கையிலும், முழு கவச உடைகள் 1000 எண்ணிக்கையிலும், பல்ஸ் ஆக்சிமீட்டர் 2000 எண்ணிக்கையிலும் அடங்கிய கரோனா தடுப்பு மருத்துவ உபகரணங்கள் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வழங்கப்பட்டன.

அதேபோல் ஒரகடம் எம்.எம். போர்ஜிங்ஸ் நிறுவனம் சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு ஆக்சிஜன் செறிவூட்டிகள், 10 கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரங்களை இன்று மாவட்ட ஆட்சியரிடம் அந்நிறுவன மனித வள மேம்பாட்டு பாதுகாப்பு மேலாளர் நவநீத கிருஷ்ணன் வழங்கினார்.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே உள்ள சிங்காடிவாக்கம் ஸ்டால் நிறுவனம் சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான 500 கரோனா முழு கவச உடையான பி.பி.இ. கிட்களை மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் அந்நிறுவன பாதுகாப்பு மேலாளர் ரவி வழங்கினார்.

இந்நிகழ்வின்போது மாவட்ட வருவாய்த் துறை அலுவலர் பன்னீர்செல்வம், தொழிற்சாலைப் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

இன்று ஒரேநாளில் 40 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.