காஞ்சிபுரம்: தொழில்போட்டியின் காரணமாக மதுபோதையில் மொபைல் ஷோரூமின் சிசிடிவி, முகப்பு லைட்கள் உள்ளிட்டவற்றை உடைத்த இருவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
காஞ்சிபுரம் சங்கர மடம் அருகில் சிவராமகிருஷ்ணன் என்பவர் தனது எம்.ஐ.மொபைல் ஷோரூமை கடந்த 7ஆம் தேதி திறக்க வந்தபோது, கடையின் சிசிடிவி, முகப்பில் இருந்த சீரியல் லைட்கள் அடித்து நொறுக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர், நடந்தவை குறித்து இன்று (செப்.9) கடைசியாக சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கண்டபோது, அதில் காரில் வந்த இருவர் பயங்கரமான மதுபோதையில் தள்ளாட்டத்துடன் தாவித் தாவி கடையின் பொருட்களை உடைத்த காட்சிகள் பதிவாகியிருந்தன.
இதனைத்தொடர்ந்து அவர், சிவகாஞ்சி காவல்நிலையத்தில் அளித்தப்புகாரின் அடிப்படையில் போலீசார் சிசிடிவி காட்சிகளில் உள்ளவர்கள் C Zone மொபைல் ஷோரூமின் உரிமையாளர் ராஜா, வேலு எனத் தெரிகிறது. தொழில் போட்டியின் காரணமாக இவ்வாறு நடந்திருக்கலாம் என்பதால், அவர்கள் மீது வழக்குப்பதிவுசெய்து, அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதையும் படிங்க: செயின் பறிக்க வந்த கொள்ளையர்களை துடைப்பத்தால் துரத்திய மூதாட்டி