தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கரோனா தொற்றால் மிக அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் கரோனா தொற்றால் இன்று (மே 7) ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கடந்த நான்கு நாள்களில் மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் 35 நபர்கள் சிகிச்சைப் பலனிற்றி உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.