ETV Bharat / state

கடப்பாரையால் தாக்கி மனைவியைக் கொலை செய்ய முயற்சி - கணவன் கைது - husband attempted to kill wife

செங்கல்பட்டு அருகே மனைவியைக் கடப்பாரையால் தாக்கி கொலை முயற்சி செய்ய கணவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கணவன் கைது
கணவன் கைது
author img

By

Published : Aug 5, 2021, 6:40 PM IST

காஞ்சிபுரம்: பச்சையம்மன் கோயில் அருகே அன்னைதெரசா தெருவில் வசிப்பவர் கோபிநாத் (43) ஆட்டோ ஓட்டுநர். இவர் மனைவி கஸ்தூரி (36). கோபிநாத் தினமும் குடித்துவிட்டு அவரது மனைவி கஸ்தூரியிடம் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இன்று (ஆக.5) கோபிநாத் அளவுக்கதிகமான மது அருந்திவந்ததாக தெரிகிறது. கஸ்தூரியிடம் வழக்கம் போல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கோபிநாத் அருகிலிருந்த கடப்பாரையால் கஸ்தூரியை தலையில் பலமாக தாக்கி உள்ளார்.

அவரின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் கஸ்தூரியை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து தகவறிந்து வந்த காவல்துறையினர் கோபிநாத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: ரூ. 3 கோடி மதிப்புள்ள வீடு அபகரிப்பு-விசிக பிரமுகர் உள்பட மூவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.